பிள்ளை பிறப்பிற்கான காத்திருப்போர்க்கான வேத வசனமும், விசுவாச ஜெபமும்! FAITH PRAYER FOR CHILD BIRTH BASED ON BIBLE VERSES

 

பிள்ளைப் பேற்றிற்காக காத்திருக்கும் உங்களுக்கு முதலாவது, "விரைவில் உங்களுக்கு பிள்ளை உண்டாகி உங்கள் வீடு மகிழ்ச்சியினாலே நிறம்பவேண்டும் என நான் இயேசுவின் இனிய நாமத்தினால் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்"

பிள்ளையின் அசீர்வாதத்திற்கான வேத வசனங்களை உங்கள் தியானத்திற்காகவும் ஜெபத்திற்காகவும் தேர்ந்தெடுத்து விசுவாச அறிக்கையோடு கீழே பதிவு செய்யப்பட்டிருக்கிறது! அன்றாடம் இந்த பயணத்தில் இந்த வசன அறிக்கை ஜெபம் பெரிய மாற்றத்தை அசீர்வாதத்தை கொண்டுவருமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அசீர்வாதத்தை சுதந்தரிக்க நாம் செய்ய வேண்டியது பிள்ளையின் அசீர்வாதத்தை சுதந்தரிக்கக்கும் வரை இந்த ஜெபத்தை செய்ய வேண்டும். ஆவியானவர் உங்களுக்கு கொடுக்கும் ஆவிக்குரிய அலோசனைகளில் நடக்கவும் வேண்டும். குடும்பத்தில் கர்த்தர் கிரியை செய்ய நாம் இடம் உண்டாக்க வேண்டும், அனுமதிக்க வேண்டும், வரவேற்க வேண்டும். சரி வசனத்திற்கு செல்லுவோம்!

CUTE BABY


1

சங்கீதம் 127:4   இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

ஜெபம்: இயேசுவின் முலமாக தேவனுடைய எல்லா அசீர்வாதங்களிலும் எனக்கு இன்று பங்கு இருக்கிறது. சங்கீதம் 127:4 வசனத்தின் படி பிள்ளை பேறு என்ற கர்த்தரின் சுதந்திரம் எனக்கு நிச்சயம் உண்டு. எனக்கு கர்ப்பத்தின் கனி என்ற பலன் கிடைக்கும் என்று இயேசுவின் லல்லமையுள்ள நாமத்தில் வேண்டுகிறேன். ஆமென்!

2

சங்கீதம் 113 : 9  மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.

ஜெபம்:  மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார் என்ற தேவ வாக்கின் படியே என் குடும்பத்தில் மலட்டு தன்மை இல்லை என அறிக்கை செய்கிறேன். இயேசுவின் நாமத்தில் பிள்ளையின் சத்தம் என் வீட்டில் கேட்கும் என விசுவாசிக்கிறேன். என் மனைவியின் மகிழ்ச்சி பெரிதாய் இருக்குமென விசுவாசத்தோடு உச்சரிக்கிறேன். ஆமென்!

3

ஆதியாகமம் 21: 1 கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். 2 - ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

ஜெபம் : கர்த்தர், முதிர் வயதிலும் சாராளுக்கும், ஆபிரகாமுக்கும் செய்த அர்ப்புதத்தை இன்று எனக்கும் செய்ய வல்லவர் என்று இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன்.  இயேசுவின் நாமத்தில் என் குடும்பத்தின் கர்ப்பத்தை திறந்து உம்முடைய வாக்கு எங்கள் வீட்டில் பிள்ளையாக பிரசவிக்கப்படுவதாக!

4

ஆதியாகமம் 25: 21 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.

ஜெபம் :  இயேசுவே, நான் குடும்ப தலைவர் என்ற அதிகாரத்தில் இருந்து,  உமது பிள்ளையாகவும் இருந்து,  நீர் தந்த என் மனைவியின் வலி, வேதனைகளை மாற்றுவீராக என்று ஈசாக்கை போலவே நானும் வேண்டுகிறேன். எங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்  என்று விசுவாசத்தோடு காத்திருக்கிறோம்.  என் மனைவி கர்ப்பந்தரிக்கும் ரெபெக்காள் என்று விசுவாசிக்கிற்றேன். ஆமென்! 

5

லூக்கா 1: 13 தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. 24 - அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து, 25 - எனக்கு இப்படிச் செய்தருளினார் ......

ஜெபம் :  சகரியா-எலிசபெத்து தம்பதிக்கும் கொடுத்த தீர்கதரிசரிசன பிள்ளையை போலவே எங்கள் குடும்பத்திலும் உம்முடைய  சித்தத்தின் படியே ஒரு தேவ தாசனை பெற்றெடுக்கும்படியாக எங்களை ஆசீர்வாதிப்பீராக என்று இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் வேண்டுகிறோம். அந்த குழந்தையின் சரியான ஆவிக்குரிய அடையாளங்களையும் பிள்ளை வளர்க்க வேண்டிய வழிகளையும் கற்றுத்தருவீராக வேண்டுகிறேன்.

6

1 சாமுவேல் 2: 20 சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள். 21 - அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான். 

ஜெபம் : அன்னாள் கேட்டுக்கொண்ட படியே நாங்களும் குடும்பமாக கேட்கிறோம், எங்களுக்கும் ஒரு பிள்ளையை கொடுப்பீர், மேலும் பல பிள்ளைகளை பெற்றெடுக்கும் படி ஆசீர்வதிப்பீராக என்று விசுவாசிக்கிறேன், இயேசுவின் வல்லைமையினால் இந்த ஜெபத்தை வேண்டுகிறோம்.

7

சங்கீதம் 127: 3 உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். 6 - நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

ஜெபம் :

கனவர்: நான் என் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பேன். என் மனைவின் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; என் பிள்ளைகள்ன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு உச்சரிக்கிறேன்.

மனைவி: நான் ன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பேன்; நான் என் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பேன். என் பிள்ளைகள்ன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு உச்சரிக்கிறேன்.

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்