டோரா வும் கிறிஸ்துமஸ் ம்

 

 


"என்னடா இது புது புரலியா இருக்குனு.." நினைத்துகொண்டே உள்ளே வந்தவர்களுக்கும், 'என்னவா.... இருக்கும்னு'  என்று உள்ளே வந்தவர்களுக்கும் ஒரு பைபிள் வார்த்தை டோராவையும் கிறிஸ்துமஸையும் எப்படி இணைக்கிறது என்று பார்க்க வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன்.

மத்தேயு 2:11 அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

Amplified Bible
And after entering the house, they saw the Child with Mary His mother; and they fell down and worshiped Him. Then, after opening their treasure chests, they presented to Him gifts [fit for a king, gifts] of gold, frankincense, and myrrh.

என்ற இந்த வசனத்தை நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது,

they presented to Him gifts /  காணிக்கையாக வைத்தார்கள் என்று வரும் இடத்தில் பைபிளை எழுத பயன்படுத்திய கிரேக்க மொழியில் 'dora' / 'டோரா' என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. (பைபிள் lexiconல் / அகராதியில் 1435. dóron (DHO-ron) என்ற வேர்ச்சொல்லில் இருந்து டோரா என்ற சொல் வருகின்றது.)

இச்சொல்லின் அர்த்தம் [a gift, present (offerings made at the temple or gifts given to God as an act of worship)] 
ஒரு பரிசு 
என்பதாகும்.

பைபிள் காலமாகிய அக்காலத்தில் கோவிலில் செலுத்தப்படும் காணிக்கைகள் அல்லது வழிபாட்டின்(ஆராதனையின்) செயலாக கடவுளுக்கு வழங்கப்படும் பலிகள் என்று பழைய ஏற்ப்பாட்டின் படி வாழ்ந்து வந்த யூத கலாச்சாரத்தில் அர்த்தம் கொள்ளப்பட்டுவந்தது என்றும்.

கிரேக்க-ரோமானிய கலாச்சாரத்தில் இந்த வார்தை உயர் அந்தஸ்த்தில் இருப்பவர்களை (ராஜா போன்றவர்களை) பார்க்க வரும்போது வெருங்கையாய் வராமல் ஏதேனும் பரிசை / வெகுமதியை மரியாதை நிமித்தமாக கொடுப்பது என்ற அர்த்தமுடையதாகவும் இந்த 'டோரா' என்ற வார்த்தை வளங்கப்பட்டு வந்தது.

என்றும் நான் அறிந்து கொண்டேன்.

"ஓ இதனால் தான் இன்றும் அரசியல் அல்லது உயர் பிரமுகர்களை யாரேனும் சந்திக்கும் போது பூச்செண்டு, புத்தகம், சால்வை என்று அன்பளிக்கிறார்களோ!"

சரி, அடுத்த முறை டோரா என்ற பெயரையோ, டோரா என்ற காதாப்பாத்திரத்தையோ பார்க்க நேர்ந்தால் இந்த அர்த்தங்க்கள் உங்கள் நினைவை நிறைக்கட்டும்.

அடுத்த முறை ஆலயம் செல்லும்போது முக்கியமாக கிரிஸ்துமஸ் காலத்தில் சபைக்கு செல்லும் போது மறக்காமல் உங்கள் பரிசுகளை / கணிக்கைகளை ராஜாதி ராஜாவாம் இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தருக்கு எடுத்துச்செல்ல மறவாதிருக்க முயற்சி செய்வோம்.

அதிலும் மேலாய் பைபிளில் ரோமர் 12:1,2 ஆகிய வசனங்கள் சொல்லுவது போல,  அன்பே உருவாய் பிறந்த இரட்ச்சகருக்கு, நமக்காய் மரிக்கவே பிறந்தவருக்கு, நம்மோடும், நமக்குள்ளும் உயிர்த்தே வழும் அவருக்கு நம்மையே, வாழும் பலிகளாய் கொடுக்க நினைவாய் இருப்போம்! 

நன்றி!






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்