கிறிஸ்துமஸ் - பரிசு என்ற வார்த்தை சேர்ந்தே ஒலிக்கும். ஏன்?
பண்டிகை என்றாலே மகிழ்ச்சி! புத்தாடை, இனிப்புகள், பலகாரங்கள், நட்புகள், சொந்தங்கள், என மகிழ்ச்சியின் அவதாரங்களின் பட்டியள் நீளும். கால காலமாய் குடும்பம் குடும்பங்களாய் கொண்டாடும் வாருடாந்திர விழாக்கள் பண்டிகை ஆகும்.
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு குணம் உண்டு. அதில் இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கும் ஒரு தனிச்சிறப்புமிக்க குனம் உண்டு. என்னவென்றால் கிறிஸ்மஸ் பன்னெடுங்காலமாக பரிசு என்ற வார்த்தையோடே சேர்ந்து ஒலிக்ககிறது. கிறிஸ்மஸ் தாத்தா என்ற கற்பனை பாத்திரம் புனையப்பட்டு, அன்நாளில் தாத்தா வருவார் பரிசுகளை தருவார் என்று பரிசு என்பது கிறிஸ்மஸ் பண்டிகையோடு ஒட்டிக்கொண்டது. சரி, ஏன் அப்படி ஆனது? பரிசு என்ற வார்த்தை சுமந்து வரும் சாரம் என்ன? என்று பார்ப்போம்.
பரிசு என்றால் பலருக்கு முதல் பரிசு-இரண்டாம் பரிசு-மூன்றாம் பரிசு என்ற போட்டி-வெற்றி என்பதனின் சத்தம் கேட்கும். சிலருக்கு அப்பாவோ அம்மாவோ அளித்த முதல் அன்பு பரிசு நினைவுக்கு வரும், அல்லது நண்பன் தந்த பாசப் பரிசு அல்லது தோழி தந்த பரவசப் பரிசு நினைவுக்கு வரலாம். ஆனால் ஒன்று விளங்க்குகிறது பரிசு என்பது நினைவுகள்-உணர்வுகள் என்ற அருவங்களின் உருவங்களாய் நம்மோடு பயணம் செய்கிறது என்றால் மகிகை ஆகாது.காலத்தை அக்காலத்தில் நடந்த சம்பவங்க்களையும் பிடித்து வைத்துகொள்ளும் ஆற்றல் உடையது பரிசு. அதை எப்போது எடுத்து பார்த்தாலும் அந்த காலத்திற்கே அழைத்து செல்லும் காலத்தை கடக்கும் வாகனமாக மாறுகிறது பரிசு.
பரிசு வெளிப்படுத்தும் இன்னொன்று, எல்லா பரிசும் ஒன்றள்ள ஆனால் எல்லா பரிசும் எப்போதும் இலவசமானது தான். இலவசமானது என்றாலும் மலிவானது அல்ல.
விலை இருக்குமென கொஞ்சமும் அறியாத சிறு பிள்ளை அதினால் தான் பெரிய பெரிய பரிசுகளை நிறைய நிறைய வேண்டுமென பேராசையை ஆசை என என்னி கேட்கும், கெஞ்சும் அடம்பிடிக்கும். பின்பு வயது ஏற ஏற் அறிவு ஏற புரிதல் வந்த பிறகு சிரியதோ பெரியதோ பரிசு என்று ஒன்று தனக்கு வந்தாலே அந்த நபருக்குள் மகிழ்ச்சி உர்ச்சாகம் மட்டுமல்ல கூடவே நன்றியும் சேர்ந்தே வருகிறது.
"பக்கத்து வீட்டில் இருந்து முன்நாள் கறிக் குழம்பு ஏந்தி வந்த 'டிஃபென் பாக்ஸ்' அடுத்த நாள் கேசரியை சுமந்து திரும்பும்"
ஒவ்வொரு பரிசுக்கு பின்னாலும் ஒரு மனது / ஒரு இதயம் இருக்கிறது. அந்த இதயம் தனக்கு என்ற சுய நலம் விடுத்து பிறர் என பொது நலம் பயக்கிறது. கிறிஸ்மஸ் அப்படி நம் ஒவ்வொருவரையும் மற்றவரை பற்றி யோசிக்க சொல்கிறது, மற்றவர் தேவை என்ன என்று சிந்தித்து நம்மால் எதை கொடுக்க முடியுமோ அதை கொடுக்க சொல்லும் ஒரு வாழ்க்கை பாடம் தருகிறது.
நாம் எப்போதும் எனக்கு என்ன கிடைக்கும் என்று "விவரமாக" இருக்க கற்றுகொடுக்கப்படுகிறோம். எதையும் நாம் எமாந்து இலந்து போய்விடக்கூடாது என்ற ஜாக்கிரதை வேறு, எவருக்கும் எப்போதும் ஈகை கரம் நீட்டவே மாட்டேன், நட்டமாகவே மாட்டேன் என்ற சுய நல பித்து வேறு. யோசித்துப்பாருங்கள் நாம் நம் உறவுகளின் உள் வட்டத்துக்குள் அப்படி இருப்போமா? இல்லை. இருந்தால் அது அரோக்கியமான உறவு சார் சூழலை உருவாக்காது. அப்படி இருந்தால் அன்பு, நட்பு இவைகளுக்கு அர்த்தமில்லாலம் போகும் அல்லவா?
எத்தனையோ முறை அண்ணன்/அக்கா தம்பியிடம்/தங்கையிடம் அறிந்தே ஏமாறுவான்/ள். அண்ணை பிள்ளையிடம் அறிந்தே பிதற்றுவாள், அப்பா தெரிந்தே தோற்றிருப்பார், கனவன் மனைவியிடம் அவள் செய்த தவறுக்கு இவர் அவளிடமே மன்னிப்பும் கேட்பார். இது அன்பின் மொழி. கொடுப்பதே அன்பின் மொழி! அன்பு கொடுக்கும் !
கிறிஸ்மஸ் காலகட்டம் என்பது மனதின் அந்த உள் வட்டத்தை பெரிதாக்கும் பயிற்சியின் காலம். கொஞ்சம் வெளியே வந்து மற்றவருக்கும் அந்த அன்பை நட்பை பரிவை காட்டும் ஒரு மனப்பயிற்சி செய்கிற நேரம். உடற்பயிர்சி போல இந்த மனப்பயிற்சியும் நீண்ட ஆயுளுக்கு உதவும்.
ஏன் கிரிஸ்மஸ் பண்டிகை இந்த பரிசு-கொடுப்பது என்ற சாரத்தை கொண்டுள்ளது?
இந்த உலகத்தில் ஒவ்வொரு பண்டிகையும் ஒரு கரு பொருளை கொண்டிருக்கும். அந்த கருபொருளை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம் இருக்கும். அந்த சம்பவத்தில் ஒரு நாயகர் இருப்பார்.
கிறிஸ்மஸ் பண்டிகையின் நாயகர் : எல்லோருக்கும் பிதாவாகிய கடவுள் (எபேசியர் 4:5)
சம்பவம் : கடவுள் மனிதனாக பிறந்தார். (லூக்கா 2:10,11)
கருபொருள் : மனிதன் கடவுளுடன் இணைந்து வாழும் பெருவாழ்வு பெற தடையாய் எழுந்து நின்ற பாவம் (எபேசியர் 2:13-15 / 1 கொரிந்தியர் 15:1-8), அதன் விளைவாக இருந்த தண்டனையையும் அழித்தொழிக்க, கடவுள் தன்னையே பாவ நிவாரண பலியாக கொடும்படி பிறந்தார் என்பதே. ம்னித குலத்தின் ஒட்டுமொத்த பாவத்தின் தண்டனையாம் மரணத்தை(ரோமர் 5:16, 6:23) ஏற்று, சிலுவையில் தன் உதிரம் சிந்தி மரிக்கவே பிறந்தார் என்பதே.
இயேசு கிறிஸ்து ஒட்டுமொத்த மனிதகுலத்திற்காக தியாக மரணத்தை அடைந்தார்(யோவான் 3:16). ஆனால் அவருடைய நீதிக்கு பரிசாய் மீண்டும் அவர் அந்த மரணத்தை விட்டு மூன்றாம் நாளில் உயிர்த்து எழும்பினார்(1கொரிந்தியர் 15:4 / ரோமர் 4:25) என்று பைபிள் உறுதிகூருகிறது.
உயிர்த்து எழுந்த அவரை விசுவாசித்து, அன்றிலிருந்து இன்றுவரை யாரெல்லாம் அவருடைய அந்த அன்பிற்கு தன்னை சமர்ப்பணம் செய்து அவரை அன்புகூர்ந்து பின்பற்றி வாழ விரும்பி அவரை கடவுள் என்று அறிக்கை செய்கிறார்களோ (ரோமர் 10:9), அவர்களை குற்றமற்றவன் என்றும், ஆசிர்வாதமான வாழ்வு, மற்றும் மரித்தாலும் நித்தியமாய் வழ்வான் என்ற நீதியையும் இறை நீதிமன்றத்தில் அவர்காளுக்காக இயேசு ஒலிக்கிறார்.
இந்த நண்மைகளை பரிசாக கொடுக்கவே இயேசு கிறிஸ்து பூமியில் பிறந்தார்.
முதலில் பூமியை கொடுத்தார், தடம்புரண்ட மனிதனுக்கு நல்வாழ்வை வாக்கு பன்னினார், வாக்கை நிறைவேற்றும் வண்ணம் அதற்கு விலையாக தன்னையே கொடுத்தார். சொன்னதை நிறைவேற்றினார்!
ஆக இந்த பண்டிகையின் நாயகர் இந்த மனித குலத்தின் தேவையை அறிந்து அதற்கு ஆகும் தீர்வை தீர்மாணித்து அதின் விலையாக தன்னையே தந்து, பரிசாக மனிதனுக்கு மன்னிப்பும், அன்பும், நீதியும், வாழ்வும் கொடுத்தார்.
இன்று இதை வாசிக்கும் நீங்கள் அவருக்கு ஒரு நன்றியை சொல்லுங்கள். பின்பு அரை பின்பற்றி வாழ உங்களது வாழ்வை சமர்ப்பியுங்கள் அதுவே அவருக்கு செய்யும் சிறந்த ஆராதனை. ஒருவரை பின்பற்றாமல் அவரைபோல மாற இயலாது. அவரை போலவே நாமும் அவரை பிரதிபலித்து மற்ற சக மனிதனுக்கு ஆழமான; அன்பு நட்பு ஆதரவு தானம் தயை (பரிசுகளை)கொடுத்து வாழும் பேறு பெற்ற வாழ்வு வாழ்வோம்!
கிறிஸ்துவின் பேரன்பு உங்களுடையதே. இப்படிக்கு உங்கள் சகோ. பெ. லெவீன் போஸ்





கருத்துகள்
கருத்துரையிடுக