உயர்வான வாழ்க்கை
என் மாணவ நண்பர்களுக்கும்,
பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் வணக்கம்!
சமீபத்தில் சென்னை சென்றிருத்தேன்!
ஆட்டோவில் omr ரோட்டில் பயணம் செய்தேன், அந்த பயணம் நான் இது வரை பார்க்காத சென்னையின் காட்சிகளை தந்தது. புதிய கண்ணோட்டங்களை தந்தது. அவைகள் உங்கள் முன் வைக்கிறேன்.
அந்த பயணம் முழுக்க அத்தனை ஆடம்பரங்கள், அத்தனை பகளிலும் கடைகளுக்குள் அத்தனை மின் வெளிச்சம், விளம்பரமா இல்லை அந்த கடையா எது அழகா இருக்கிறது என்ற குழப்பத்தை உண்னடாக்கும் அளவு கண்கவர் காட்சிகள்.
காரில், பஸ்சில் பயணம் பன்னும்போது ஒரு சமமான மற்றும் சுகமான பயணத்தை தரும், ஆனால் இந்த
ஆட்டோவின் உயரத்தில் இருந்து பார்கும்போது அவை அனைத்தையும் ஒரு நடுத்தர குடும்பத்தின் பிள்ளையின் பார்வையை தந்தது. பல நாள் கழித்து இந்த பார்வை எனக்கு உண்டானது.
ஒவ்வொன்றையும் அது இருக்கும் உயரத்தை விட பிரம்மாண்டமாகவே, உயரமாகவே காண்பித்துக்கொண்டே வந்தது அந்த பயணம்.
இத்தனை அழகு, மிளிரும் விளக்குகள், மின்சாரம், வேலை ஆட்கள், வாடகை, அப்பப்பா கணக்கு போட்ட உடன் என் தலை தொங்கிருச்சு.
சரி இதை வாங்கும் ஆட்கள் உண்டு என்று தானே இவர்கள் கடை திறக்கின்றனர் என்ற கேள்வி எழும்பிய உடன். எத்தனை பேர் இங்க இருக்காங்க, இந்த்நகரத்தின் வாங்கும் சக்தி, இது போன்ற சிந்தனைகளை், இந்த நிலப்பகுதியின் நிஜ பிரம்மாண்டத்தை புரிய வைத்தது.
நிமிர்ந்து நிற்கும் பல மாடி குடியிருப்புகள் கண்ணில் பட்டது, இது தான் உயரமான வழ்க்கையோ? என்று நொந்துகொண்டே உள்ளம் பேசியது.
அப்பா அம்மாவை விட்டு பிழைக்க பல மாவட்டங்கள், கிராமங்களில் இருந்து வரும் என் மாணவர் கூட்டங்கள் இந்த விளம்பரங்களுக்கும், ஆடம்பரத்திற்கும் இரையாகிவிடுகிறார்களோ என்ற அழுத்தம் கூடியது.
Credit cardஆல் தன் போன மாத உழைப்பையும், வரும் எதிர்கால சேமிப்பையும் தேய்த்து சென்னையை ஒளிர வைக்கும் வலிபர்களை நினைத்து நெஞ்சம் பாரமாச்சு!
இப்பிருக்கிற பசங்கெல்லாம் smartங்குனு சொல்லி சொல்லி நாம் நம் பிள்ளைகளுக்கு smartஆ வாழ சொல்லிக்கொடுக்காம அவர்கள் ஏமாராங்களோனு தோனுச்சு!!
சென்னையின் கட்டிடங்கள் உயரவுது மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்த்தாகாது.
வாலிப உழைபாலர்கள் தங்களுடைய உழைப்பால் உயர வேண்டும். தங்கள் உழைப்பால் தங்கள் வாழ்க்கையின் பொருளாதார நிலையில் மாற்றம் வரவைக்க வேண்டும் என்பது என் ஆசை, தங்கள் உழைப்பால் அடுத்தவர்களை பணக்காரர் ஆக்கும் சமுதாய தொண்டை நிறுத்தி வைத்துவிட வேண்டும்.
தங்கள் வாழ்க்கை உயர்வு என்பது உடனே வேலை கிடைத்த அடுத்த மாதமே வருவது அல்ல, அது எவ்வளவு வங்குகிறோம் என்பதில் இல்லை, எந்த கடைகளில் உணவு உண்ணுகிறோம் என்பதில் இல்லை, துணி கடையில் எந்த பகுதிக்கு சொல்கிறோம் என்பதில் இல்லை, இவைகளில் மட்டும் இல்லை, எவ்வளவு ஆக்கப்பூர்வமாக சேமிக்கிறோம் என்பதிலே தான் உண்டு, அது எதிர்கால திட்டங்களில் உள்ளது. உங்களுக்க கிடைத்திருக்கும் வேலை உங்கள் எதிர்கால உயர்வுக்கான ஆரம்பமே!
மிக துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் உயர்வு என்பது சிந்தனையில் தான் உள்ளது!! பணம் என்பது அந்த உயர்வான வாழ்க்கையை பெற்றோர், மனைவி, குழந்தைகள் இவர்களோடு அதை மற்ற எளியவர்களுக்கும் கொடுத்து சிறப்பாக கொண்டாடுவதற்கே!

கருத்துகள்
கருத்துரையிடுக