கிறுக்கள்! நிலா அவள் மெண்தான்!
அன்று உரக்கம் வரவில்லை,
கண் விழித்தேன்,
வானம் என்னும் நீச்சல் குளம், அங்கு குளித்துக் கொண்டிருந்தது "நிலவு".
ரசித்துக் கொண்டிருந்தேன். பெருமூச்சோடே வந்தது ஒரு ஐயம்.
நிலவு ஆணா? பெண்ணா?
இந்த சிக்கலான கேள்வியோடு மொட்டை மாடியில் படுத்துக்கொண்டிருந்த என்னை பார்த்த நிலவு,
மேகம் என்னும் வென்னிர சீலை எடுத்து அவசரமாய் தன்னை மறைத்துக் கொண்டது, பின் மறைந்து நின்றது,
என் ஐயமும் நீங்கியது.
நிலவாகிய அவள் பெண்ணே!

கருத்துகள்
கருத்துரையிடுக