டோரா வும் கிறிஸ்துமஸ் ம்
"என்னடா இது புது புரலியா இருக்குனு.." நினைத்துகொண்டே உள்ளே வந்தவர்களுக்கும், 'என்னவா.... இருக்கும்னு' என்று உள்ளே வந்தவர்களுக்கும் ஒரு பைபிள் வார்த்தை டோராவையும் கிறிஸ்துமஸையும் எப்படி இணைக்கிறது என்று பார்க்க வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன். மத்தேயு 2:11 அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். Amplified Bible And after entering the house, they saw the Child with Mary His mother; and they fell down and worshiped Him. Then, after opening their treasure chests, they presented to Him gifts [fit for a king, gifts] of gold, frankincense, and myrrh. என்ற இந்த வசனத்தை நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, they presented to Him gifts / காணிக்கையாக வைத்தார்கள் என்று வரும் இடத்தில் பைபிளை எழுத பயன்படுத்திய கிரேக்க மொழியில் 'dora' / 'டோரா' என்று பயன...